LocalUp Country

வெண்சந்தன மரத்தை வெட்டியவரின் தலையை வெட்டிய வீட்டு உரிமையாளர்! இரத்தம் தோய்ந்த வாளுடன் பொலிஸில் சரண்!! பதுளையில் பயங்கம்!!!

வீட்டு வளவிலிருந்த வெண்சந்தன மரத்தை வெட்டிக் கொண்டு செல்ல முயற்சித்த நபரை , வாளால் வெட்டிக் கொலை செய்து, இரத்தம் தோய்ந்த வாளுடன் வீட்டுரிமையாளர் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம், இன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை –  சொரணாதொட்டையைச் சேர்ந்த 47 வயதான தம்மிக்க ரனதுங்க என்பவரே, வெண் சந்தன மரத்தை வெட்டியதால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையை மேற்கொண்ட நபர், இரத்தம் தோய்ந்த வாளுடன், பதுளைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதையடுத்து, கைது செய்யப்பட்ட இந்நபர், பதுளை மஜிஸ்ரேட் மேலதிக நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதும், நீதிபதி அந்நபரை, 14ஆம் திகதி (14-12-2018) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading