Local

ஹக்கீம் தலைமையில் நாளை அவசரமாகக் கூடுகிறது மு.கா.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம், நாளை (11) அவசரமாகக் கூடவுள்ளது எனக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், சில தினங்களுக்கு முன்னர், உம்ரா சென்றிருந்த நிலையில், நாளை நாடு திரும்பவுள்ளனர்.

நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்ட நிலையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் நாளை இக்கூட்டம் கூடவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட உயர்மட்டத் தரப்பினர் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading