Local

ஹெரோயினுடன் ஜேர்மன் பெண்கள் இருவர் நுவரெலியாவில் கைது!

ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதைப் பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர்.

ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணிகளாக வந்த இவ்விரண்டு பெண்களும், வாடகை காரொன்றின் ஊடாக நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.

அவ்வேளையில் ஹட்டன், மல்லியப்பு சந்தியில் வைத்து பொலிஸார், குறித்த காரை பரிசோதனை செய்த போதே அதில் பயணித்த பெண்களிடமிருந்து இருந்து மேற்படி போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

க.கிசாந்தன் – பத்தனை நிருபர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading