World

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

வெனிசுலா நாட்டை அடுத்தடுத்து தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக இடிந்து விழுந்துள்ள கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் அவசரகால மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அதிகாரிகள் நாட்டின் பிரதான விமான நிலையத்தை மூடி, பாடசாலைகளை இடைநிறுத்தியும், பேரிடருக்கு பதிலளிக்கும் வகையில் சுகாதார பணியாளர்களை திரட்டியுள்ளனர்.

இதனால், 1,000 முதல் 10,000 பேர் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் இணைப்பு

வெனிசுலா நாட்டை அடுத்தடுத்து தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடிந்து விழுந்த கட்டடங்களில் மீட்புப்பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம் | Earthquakes In Venezuela Buildings Ground Level

இரண்டாம் இணைப்பு

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸ் அருகே (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் அதிர்வுகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களுக்கு பிறகு, வெனிசுவேலா மற்றும் அருகிலுள்ள கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு

வெனிசுலாவில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.

அடுத்தடுத்து 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம் | Earthquakes In Venezuela Buildings Ground Level

இந்த நிலநடுக்கம் 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் சில நிமிட இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் தலைநகர் கராகஸில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, கரீபியன் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதை வெனிசுலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ உறுதிப்படுத்தியுள்ளார்.

வீடுகளுக்குள்  செல்ல வேண்டாம்

இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என கூறப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம் | Earthquakes In Venezuela Buildings Ground Level

மேலும், தொடர் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் யாரும் அவசரப்பட்டு தங்களது வீடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், பொது இடங்களில் திறந்தவெளியில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் விரைந்து செல்ல ஏதுவாகப் பொதுமக்கள் சாலைகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading