World

அதிகரிக்கும் கொரோனா புத்தாண்டு கொண்டாட தடை?

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10 ஆம் திகதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்த தடையானது டிசம்பர் 15 ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இதற்கிடையே அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா வகையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிய வகை கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலர், மருத்துவத்துறை செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading