World

அதிகாரியின் உணவை நாய் திருடியதாக புகார்!

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஜெயில் அதிகாரி மதிய நேரம் தனது அறையில் உணவு சாப்பிட்டு கொண்டுசென்றுள்ளார்.அப்போது அறைக்கு வெளியே பொலிஸ் மோப்ப நாய் இருந்துள்ளது.
அதிகாரி சாப்பிட்டு கொண்டிருந்த போது ஜெயிலில் இருந்த ஒருவர் உதவி கேட்டு வந்துள்ளார்.அவருக்கு உதவுவதற்காக அதிகாரி, சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.அதிகாரி திரும்பி வந்து பார்த்த போது அறையில் இருந்த சாப்பாட்டு பாத்திரம் காலியாக இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிக்கு, அறைக்கு வெளியே நின்ற பொலிஸ் நாய் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர், தனது மதிய உணவை பொலிஸ் நாய் தின்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.மேலும் இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜெயில் அறையில் அதிகாரியின் காலியான சாப்பாட்டு பாத்திரமும், அதனை சாப்பிட்டதாக கூறப்பட்ட நாயின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. தற்போது இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading