EntertainmentWorld

அதிசய ஊர் ஒரே வரிசையில் இருக்கும் 6 ஆயிரம் பேர்!

சுலோஸோவா (Suloszowa). இது போலந்திலுள்ள ஒரு நகரம். இந்த நகரத்தில் சுமார் 6,000 பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் வீடுகள் கட்டி வசிக்கின்றனர் என்பதே இந்த நகரத்தின் சிறப்பம்சம்.

இந்த ஊர் ‘Little Tuscany’ என்றும் அழைக்கப்படுகிறது. இது போலந்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
விளம்பரம்

வீடுகள் அனைத்தும் 9 கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ள நீண்ட தெருவில் வரிசையாக அமைந்துள்ளன.

2017ஆம் ஆண்டு அந்த ஊரில் 5,819 பேர் வசித்ததாகப் போலந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் ஒரே சாலையைப் பயன்படுத்துகின்றனர். எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் அந்த ஊரின் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

அந்தப் படங்களைப் பார்த்த இணையவாசிகளில் பலர் ஊரின் தனித்தன்மையைக் கண்டு மலைத்துப் போயினர். அவர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது அந்த ஊர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading