அநியாயம் செய்பவர்களின் பிரார்த்தனையை கடவுள் ஏற்பதில்லை..!!
போருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனைகளைக் கடவுள் ஏற்பதில்லை என பாப்பரசர் லியோ வெளியிட்ட கருத்தை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.
வன்முறை மற்றும் அழிவுக்கான வேண்டுதல்கள் ஆன்மீகத்திற்குப் புறம்பானவை என பாப்பரசர் லியோ குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், ஈரானில் “முற்றிலும் அழிவை” (Overwhelming destruction) ஏற்படுத்த வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த சில நாட்களிலேயே, பாப்பரசர் இந்த முக்கிய கருத்து வெளியாகியிருந்தது.
அமெரிக்க இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள், போரை நியாயப்படுத்துவதற்காக மத ரீதியான கருத்துக்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் முறைப்பாடு அளித்துள்ளதாக இராணுவ மத சுதந்திர அறக்கட்டளையை கோடிட்டு அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

You must be logged in to post a comment.