Local

அன்று பெற்ற வெற்றியே இலங்கையைப் பாதுகாக்கிறது! மஹிந்த தெரிவிப்பு!!

இலங்கை வரலாற்றில் முப்பது ஆண்டுகால ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 17ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக முப்படைகளின் வீரர்கள் செய்த அளப்பரிய தியாகங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க யுத்த வெற்றியை எக்காரணம் கொண்டும் எவரும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். பலத்த சவால்களுக்கு மத்தியில் அன்று வென்றெடுக்கப்பட்ட சுதந்திரத்தின் பயனாக, இன்று நாடு பிளவுபடாமல் ஒற்றையாட்சியாக நீடித்து உள்ளதையிட்டு தான் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading