அபாய வலயத்தில் இருந்த காதலியை அழைத்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பதவி பறிபோனது

நீர்கொழும்பு கொரோனா அபாய வலயத்தில் இருந்த காதலியை அழைத்து வந்து, மாத்தறையிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்த, பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு இடைநீக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பில் இருந்த காதலியை அழைத்து வந்து, உறவினர் வீட்டில் தங்க வைத்து, தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
