Local

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தீவிர ஆபத்தில்!

தவறான மற்றும் நிதிச் சரிவை எதிர்கொள்ளும் அரசாங்கங்களால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் அவற்றின் பொருளாதாரங்களும் தீவிர ஆபத்தில் உள்ளன என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் வெளி மற்றும் உள்நாட்டு சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திற்கான கூட்டுப் பார்வையை உணர இதுவே தருணம் என்று இலங்கை நம்புகிறது. அத்துடன் அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நியாயமான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ​​ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading