World

அப்துல் கலாமின் நெருங்கிய நண்பர் கொரோனாவுக்குப் பலி!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராமப்புறங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று புதிதாக 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் கடநாடு பகுதியை சேர்ந்தவர் போஜன் (89). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் திருச்சி ஜோசப் கல்லூரியில் போஜன் ஒன்றாக படித்தவர். இதனால், அப்துல்கலாமின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதும், ஊட்டிக்கு வந்தபோதும் இவரை சந்தித்து பேசினார்.

அப்துல் கலாமின் டாட்டர்ஸ் ஆப் இந்தியா எனப்படும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் நீலகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். வயது மூப்பின் காரணமாக போஜன், கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலிருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading