World

அமெரிக்காவின் இறுதி முயற்சி!! வாழ்வா? சாவா?

இப்போது உலகெங்கும் நடப்பவற்றைக் கொஞ்சம் உற்று நோக்குங்கள்…

ஈரானில் போர் பதற்றம், கிரீன்லாந்திற்கு விடுக்கப்படும் மிரட்டல்கள், வெனிசுலாவில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவப் படைகள், கனடா மீதான அரசியல் அழுத்தங்கள். இவை அனைத்தும் தனித்தனியாக, தற்செயலாக நடப்பவை என்று நீங்கள் நினைத்தால், அதுதான் தவறு.

இவை யாவும் crisis கள் அல்ல; மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் சதிவலையின் வெவ்வேறு புள்ளிகள்.

அந்தப் புள்ளிகளை நீங்கள் இணைத்துப் பார்க்கத் தொடங்கிவிட்டால், உலக அரசியலின் உண்மையான முகம் உங்களுக்குத் தெரியவரும்.

அமெரிக்கா Global crisis களில் தடுமாறவில்லை; மாறாக, அது ஒரு பிரம்மாண்டமான வியூகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது.

அதன் இலக்கு சீனாவை வீழ்த்துவதோ, ஈரானை அழிப்பதோ, அல்லது ரஷ்யாவை நசுக்குவதோ அல்ல. அதன் உண்மையான இலக்கு அதைவிடப் பெரியது, பழமையானது, மற்றும் ஆபத்தானது:

உலகப் பொருளாதாரத்தை தன் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அதுவே அதன் இலக்கு.

இந்த மாபெரும் திட்டத்தைப் புரிந்து கொள்ள, நாம் ஒரு எளிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலக வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கப்பல் பாதைகளை கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்காவால் ஒட்டுமொத்தப் பெருங்கடலையும் கட்டுப்படுத்த முடியாது.

கடல் மிகவும் பரந்தது. அதற்குப் பதிலாக, உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் ‘Choke Points எனப்படும் குறுகிய கடல் வழிப்பாதைகளை அமெரிக்கா தன் பிடிக்குள் கொண்டு வர நகர்வுகளை மேற்கொள்கிறது.

இந்தக் குறுகிய கடல் வழிகள்தான் ( choke points)உலக வர்த்தகத்தின் நரம்பு மண்டலங்கள்:

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz): உலகின் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் நாள்தோறும் கடந்து செல்லும் பாதை.

மலாக்கா ஜலசந்தி (Strait of Malacca): சீனாவின் 80% எரிசக்தி இறக்குமதி இதன் வழியாகத்தான் நடக்கிறது.

பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய், ஜிப்ரால்டர் ஜலசந்தி மற்றும் கிரீன்லாந்துக்கு அருகிலுள்ள ஆர்க்டிக் கடல் பாதைகள் போன்ற அனைத்தையும் அதனது கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

உலகை வெல்லத் தேவையில்லை, இந்த வழிப்பாதைகளைக் கட்டுப்படுத்தினால் போதும்; ஒட்டுமொத்த உலகமும் உங்களிடம் மண்டியிட்டே தீர வேண்டும்.

தற்போது அமெரிக்கா இந்த அனைத்துப் choke point பாதைகளையும் ஒரே நேரத்தில் குறிவைக்கிறது.

உண்மையில் தற்சமயம் என்ன நடக்கிறது என்று பாருங்கள்:

ஈரானியப் பகுதியில் பதற்றத்தை உருவாக்குவதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கண்காணிக்கிறது.

மலாக்கா ஜலசந்தியை ஒட்டியுள்ள இந்தோனேசியாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தங்களைச் செய்கிறது.

பனாமா கால்வாயில் பிடியை இறுக்குகிறது.

ஆர்க்டிக் வர்த்தகப் பாதையைக் கைப்பற்ற கிரீன்லாந்தை வாங்குவது பற்றிப் பேசுகிறது.

Gibraltar அருகே மொராக்கோவுடன் கைகோர்க்கிறது.

சீனாவின் lithium தேவையைப் முடக்க வெனிசுலாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இது தற்செயல் அல்ல, சீனாவை நாலாபுறமும் சுற்றியடைக்கும் ஒரு பக்காவான ‘Blue print’ .

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா சிதைந்து கிடந்தபோது, அமெரிக்கா ‘மார்ஷல் பிளான்’ (Marshall Plan) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. ஐரோப்பாவிற்குத் தேவையான அனைத்தையும் அமெரிக்கா விற்றது,

அதை வாங்குவதற்கான டாலர்களையும் கடனாகக் கொடுத்தது. அதுதான் அமெரிக்காவை உலகின் அதிபணக்கார நாடாக்கியது.

இன்று நடப்பதும் அதேதான், ஆனால் உலக அளவில்!

அமெரிக்காவின் நோக்கமே உலகை எப்போதும் போர்க்களமாக வைத்திருப்பது.

ஐரோப்பாவை ரஷ்யாவுக்கு எதிராகவும், ஈரானை இஸ்ரேலுக்கு எதிராகவும், சீனாவை ஜப்பானுக்கு எதிராகவும் மோத விடுவது.

உலகமே போரில் எரியும்போது, அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்கும்;
ஆயுதங்களை விற்கும், எரிசக்தியையும் உணவையும் விற்கும், அவற்றை வாங்குவதற்கு டாலர்களைக் கடனாகவும் கொடுக்கும்.

இதற்காகத்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பட்ஜெட் $900 பில்லியனைத் தாண்டியுள்ளது.

இதற்காகத்தான் ‘ஆபரேஷன் ஸ்டார்கேட்’ (Operation Stargate) மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்களில் $500 பில்லியன் முதலீடு செய்யப்படுகிறது.

உள்நாட்டில் கடுமையான உளவுத்துறையும், ராணுவ பலமும் இதற்குத் தேவையாக இருக்கிறது.

ஆனால், வரலாறு நமக்கு ஒரு முக்கியப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. இந்த வியூகத்தைக் கையாண்ட எந்தவொரு பேரரசும் வரலாற்றில் நிலைத்திருந்ததில்லை.

ரோம் இதைச் செய்தது, ஸ்பெயின் இதைச் செய்தது, பிரிட்டிஷ் பேரரசும் இதைத்தான் செய்தது. ஆனால், அவை அனைத்தும் மூன்று முக்கியக் காரணங்களால் வீழ்ந்தன:

தேசியவாதம் (Nationalism),
ஊழல் (Corruption), மற்றும்
உள்நாட்டுக் பிளவு (Internal Division).

அச்சுறுத்தப்படும் நாடுகள் அனைத்தும் ஒருகட்டத்தில் அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றிணையும்.

ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் அதிகாரவர்க்கத்தால் ஊழல் செய்யப்பட்டு திருடப்படும்.

தங்களுக்குச் சம்பந்தமில்லாத போர்களில் தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுக்க விரும்பாத மக்கள், சொந்த அரசுக்கு எதிராகவே புரட்சி செய்வார்கள்.

இன்று அமெரிக்காவில் இந்த மூன்று அறிகுறிகளும் ஒரே நேரத்தில் தென்படத் தொடங்கிவிட்டன.

எனவே, இன்று உலக அரங்கில் நீங்கள் காணும் குழப்பங்கள் வெறும் தற்செயலானவை அல்ல. அவை, உலகளாவிய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள அமெரிக்கா எடுக்கும் இறுதி மற்றும் Desperate முயற்சி.

இது இன்னும் சில ஆண்டுகள் அல்லது ஒரு தசாப்தம் கூட வேலை செய்யலாம். ஆனால் வரலாறு எப்போதும் தன் முடிவில் தீர்க்கமாக இருக்கிறது:

எந்தவொரு பேரரசும் உலகை என்றென்றும் ஆள முடியாது. அது எவ்வளவு பலமாக கத்திக் கூச்சலிடுகிறதோ, அவ்வளவு வேகமாக அதன் வீழ்ச்சியும் அரங்கேறும்.

அமெரிக்காவின் இந்த மாபெரும் உலகளாவிய வியூகம் வெற்றிபெறுமா? அல்லது அது அவர்களுக்கே Backfire ஆகி வீழ்ச்சியை ஏற்படுத்துமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்கள் கருத்தை பதிவிடுங்கள். நன்றி.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading