World

ஈரானின் வீழ்ச்சியும் எழுச்சியும்

உலக வல்லரசுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து தனித்து போராடும் தேசமான ஈரான் தன் மீதான ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதலில் வீழ்ச்சி கண்டு தன் எழுச்சியை உலகுக்கு காட்டியுள்ளது.

கடந்த காலங்களை போல் உலகின் பல நாடுகளில் அமெரிக்கா ஆடிய ஆதிக்க விளையாட்டுகளை போல் இம்முறையும் ஆட நினைத்தது. ஆனால் அந்த விளையாட்டுக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த ஈரான் எனும் ஆடுகளம் தான் தவறாகிப்போனது.

எதை சாதிக்க நினைத்தார்களோ அதை ஈரான் போதிக்க வைத்துள்ளது. எதை அடக்க நினைத்தார்களோ அதை ஈரான் அடக்கியாள்கிறது. எதை வீழ்த்த நினைத்தார்களோ அதை ஈரான் காத்து நிற்கிறது.
இப்படி ஈரானிடம் இருந்து தட்டிப்பறிக்க நினைத்த அனைத்தையுமே ஈரான் அரசு மிகச்சிறப்பாக தற்காத்துக்கொண்டது. அதே நேரம் ஆக்கிரமிப்பாளர்களின் அநியாய தாக்குதல்களால் உயிர், உடமை என ஈரான் பல இழப்புகள் கண்டுள்ளதும் உண்மை தான்.

ஆனால் இந்த இழப்புகளால் வீழ்ந்து மண்டியிடாது சண்டையிட்டு ஆக்கிரமிப்பு தலைமைகளின் மண்டைகளில் மணியடித்து காட்டியுள்ள ஈரானிய இராணுவம்
வீழ்வதும் வெற்றி வாழ்வதும் வெற்றி என்ற வீர முழக்கத்தை கொள்கையாக்கி அமெரிக்காவின் கோர முகத்தில் காறி உமிழ்ந்துள்ளது.

வியட்னாம், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளை அமெரிக்க இராணுவம் ஆக்கிரமித்த காலங்களில் சமூக ஊடகங்கள் இருக்கவில்லை அப்போதெல்லாம் வெறும் தொலைக்காட்சி செய்திகளும் பிந்திய பத்திரிகை கணிப்புகளுமே மக்களை சென்றடைந்தன. இந்த செய்திகளின் ஊடாக உலகையே ஏமாற்றிய இந்த ஏகாதிபத்திய சக்திகள் தற்காலத்தில் தம் தோல்வியை மறைக்க வழி இன்றி தவிக்கின்றார்கள். அதனால் தான் டொனால்ட் ட்ரம்ப் செய்வதறியாது பொய் கூறி புலம்புகிறார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த மக்களை. இப்போது அமெரிக்க மக்களே உண்மை நிலையை உணர தொடங்கி விட்டார்கள்.

ஆக சொந்த நாட்டு மக்களே தம் ஆட்சியாளர்களை வெறுத்து ஒதுக்க ஆக்கிரமிப்பு என்ற வார்த்தையை ஆயுளுக்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் உச்சரிக்க முடியாத படி உலக நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஓரம் கட்டி ஒதுக்கும் நிலை மிக விரைவில் வரப்போவது உறுதி.
ஆனால் அதற்கு முன் இந்த இரண்டு தீய சக்திகளும் உலகை பெரும் வீழ்ச்சிடைய செய்யும் சூழ்ச்சிகளை செய்வார்கள்.
இவர்களின் சதிகளை தகர்த்து உலகம் மீண்டெள மிக நீண்ட போராட்டமொன்றை கடக்க நேரிடலாம் அல்லது இந்த வீழ்ச்சியை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து போரிடலாம்.

வீழ்ச்சியும் கண்டு எழுச்சியும் கண்டுள்ள ஈரானின் ஆட்சியை முன்னுதாரணமாக்கி ஆக்கிரமிப்பை அழிக்க சில நாடுகள் முன் வந்தாலே அன்றி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தலைவர்களின் வருங்கால ஆபத்தில் இருந்து உலகை காக்க வாய்ப்புகள் கிடையாது என்பதே நிதர்சனமாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading