World

அமெரிக்காவிலும் நிலநடுக்கம்!

50 தசாப்தங்களுக்கு பின்னர் அமெரிக்காவில் மிக மோசமான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் மேற்கு நியூயார்க் பஃபேலோ பகுதியில் (06) அதிகாலை 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ளும் மேற்கு நியூயார்க்கில் 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.

பஃபலோ குடியிருப்பாளர்கள் காலை 6:15 மணியளவில் ஒரு நடுக்கத்தை உணர்ந்ததாக தேசிய வானிலை சேவை உறுதிப்படுத்துகிறது, அது குடியிருப்பாளர்களை ஒரு அதிர்ச்சியுடன் எழுப்பும் அளவுக்கு வலுவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

இதேவேளை, துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading