World

அமெரிக்காவில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட 6 இளம் பெண்கள்!

அமெரிக்காவில் ஆறு இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 100 மைல் சுற்றுவட்டாரத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் போர்ட்லாந்து பகுதியிலுள்ள பிலெசன்ட் பள்ளத்தாக்கில் கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் திகதி அன்று கிளார்க் கவுன்டியிலுள்ள ஒரு பாழடைந்த பகுதியில் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே மாதத்தில், மேலும் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறுதியாக, ஏப்ரல் 30 ஆம் திகதியன்று நார்த்வெஸ்ட் போல்க் கவுன்டியில், ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஒரே சுற்றுவட்டாரத்தில் 6 பெண்கள் அடுத்தடுத்து மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த கொலைகள் அனைத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading