World

அமெரிக்காவில் இருந்து 400 ஈரானியர்கள் வெளியேற்றம்,,!!

அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறிய ஈரான் நாட்டைச் சேர்ந்த 120 பேர் விரைவில் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் 400-க்கும் அதிகமான ஈரான் நாட்டினர் மீண்டும் தாயகம் அனுப்பப்படுவார்கள் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் ஈரானியர்களின் முதல் குழு விமானம் தலைநகர் தெஹ்ரானை வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு ஊடகங்களில் இது குறித்த செய்திகள் முதலில் வெளியாகின. ஆனால், ஈரான் அரசுடனான இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற 12 நாள் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் இராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா பதுங்குகுழிகளைத் தாக்கியழிக்கும் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியமை தெரிந்ததே.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading