காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை திறப்புடன் தென் பகுதியில் தனது இருப்பை விரிவுபடுத்தும் ‘பெஷன் பக்’
இலங்கை, கொழும்பு – 2026 ஓகஸ்ட் 01: இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான பெஷன் பக் (Fashion Bug), காலியில் தனது மாபெரும் கிளையைத் திறந்து வைத்துள்ளதன் மூலம் அதன் நாடளாவிய விற்பனை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. உயர்தர ஆடைகள் மற்றும் வடிவமைப்புகளை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதற்கான தனது அர்ப்பணிப்பை இதன் மூலம் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
காலி நகரின் மையப்பகுதியில் அனைவருக்கும் வசதியாக அமைந்துள்ள இந்த புதிய கிளையானது, முழுக் குடும்பத்திற்குமான ஆடைகள், அணிகலன்கள், பாதணிகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற பரந்த தயாரிப்புகளின் வரிசையை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு நவீன விற்பனைச் சூழலுடன் கூடிய மேம்பட்ட ஷொப்பிங் அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான இட அமைப்பும், நேர்த்தியான உட்புற வடிவமைப்பும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை அளிப்பதுடன், புத்தம் புதிய நவீன வெளியீடுகளை ஒரே இடத்தில் கண்டறிந்து, கொள்வனவு செய்வதற்கு வழிவகுக்கிறது.
இந்த கிளை வலையமைப்பு விரிவாக்கமானது பிராந்திய சந்தைகளில் பெஷன் பக் நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீட்டின் ஒரு அங்கமாக அமைவதுடன், இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் உயர்தர நவநாகரிக ஆடைகளை எளிதாக கிடைக்கச் செய்வதற்கான இவ்வர்த்தகநாமத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது. தென் மாகாணத்தில் தனது இருப்பை நிலைப்படுத்துவதன் மூலம், சிறந்த மதிப்புமிக்க தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவையையும் வழங்குவது தொடர்பான தமது மூன்று தசாப்த கால புகழை நிறுவனம் தொடர்ச்சியாக கட்டியெழுப்புகிறது.
இது குறித்து பெஷன் பக் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷபீர் சுபியான் கருத்துத் தெரிவிக்கையில், “காலியில் எமது புதிய மாபெரும் கிளையைத் திறந்து வைத்துள்ளமையானது, எமது வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும். தென் மாகாண வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்தையும் கொள்வனவு செய்யும் அனுபவத்தைக் கொண்டு சேர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு இலங்கை குடும்பத்திற்கும் தரமான ஆடைகளை எளிதாக கிடைக்கச் செய்வதே எமது முதன்மையான நோக்கமாக இருந்து வருகிறது, அத்துடன் எமது தயாரிப்புகள் மூலம் சிறந்த மதிப்பை வழங்க நாம் தொடர்ந்தும் கடமைப்பட்டுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கும் முழு பெஷன் பக் குடும்பத்தினருக்கும் அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
உத்தியோகபூர்வ நாடா வெட்டும் நிகழ்வைத் தொடர்ந்து பாரம்பரிய விளக்கேற்றும் நிகழ்வுடன் இந்த மாபெரும் திறப்பு விழா இடம்பெற்றதோடு, காலியில் இவ்வர்த்தகநாமத்தின் புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக இது அமைந்தது. வணிகக் கூட்டாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், இலங்கையின் மிகவும் நேசிக்கப்படும் நடிகைகளில் ஒருவரான தினக்ஷி பிரியசாத்தின் வருகையானது, கொண்டாட்டங்களை மேலும் சிறப்பித்தது. வருகை தந்த விருந்தினர்கள் இக்கிளையினை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டதோடு, அவர்கள் நிறுவனத்தின் புதிய விற்பனை கட்டமைப்புகளை நேரடியாக கண்டறிந்து அதன் முழுமையான அனுபவத்தை பெற்றதோடு, புத்தம் புதிய நவநாகரிக ஆடை அணிகலன்களையும் பார்வையிட்டனர்.
இக்கிளையானது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதுடன், காலி மக்களுடனான பெஷன் பக் நிறுவனத்தின் நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துகிறது. இவ்வர்த்தகநாமம் தனது தடத்தை தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வருவதோடு, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஆதரித்து, உயர் ரக தயாரிப்புகளின் விற்பனை அனுபவத்தை வழங்குவதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.
காலியில் உள்ள புதிய பெஷன் பக் கிளைக்கு வருகை தந்து, புத்தம் புதிய நவநாகரிக ஆடை, அணிகலன்கள், அவற்றிற்கான சலுகைகள் மற்றும் சிறந்த ஷொப்பிங் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அழைப்பு விடுக்கிறது. இலங்கை முழுவதும் தனது விரிவாக்கத்தை பெஷன் பக் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில், உலகளாவிய நவநாகரிக போக்குகள், உயர் தர தயாரிப்புகள், சிறந்த மதிப்பு ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் உள்ள அதன் கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதன் மூலம் வாழ்க்கை முறைகளை மாற்றுவதில் இவ்வர்த்தகநாமம் உறுதியுடன் உள்ளது.


You must be logged in to post a comment.