Jobs

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

 
வாகனங்கள் மென்பொருள் மூலம் வரையறுக்கப்படும் அமைப்புகளாக மாறிவரும் நிலையில், Evolution Auto நிறுவனத்தின் வாகன வரிசையானது, XPENG L03 மாதிரியில் 48 TOPS முதல் AVATR 07 மாதிரியில் 100 TOPS வரையிலான AI கணக்கிடும் திறன்களை வழங்குகிறது
வாகனத் துறையானது மென்பொருள் மூலம் வரையறுக்கப்படும் வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், வாகன கணிப்பீட்டுத் திறனின் (computing power) அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை Evolution Auto முன்னிலைப்படுத்துகிறது. அதன் தற்போதைய வாகன வரிசையானது, XPENG L03 மாதிரியில் 48 TOPS முதல் இலங்கையிலுள்ள SUV வாகனங்களிலேயே மிக உயர்ந்த TOPS அளவான AVATR 07 மாதிரியில் 100 TOPS வரையிலான AI கணக்கிடும் திறன்களைக் கொண்டுள்ளது.
நுகர்வோரைப் பொறுத்தவரையில், ஒரு வாகனத்தின் கணக்கிடும் திறனைப் புரிந்து கொள்ளும் ஒரு வழியாக TOPS (Trillion Operations Per Second) அமைகிறது. எளிமையான சொற்களில் கூறுவதானால், TOPS என்பது ஒரு கணிப்பீட்டு அமைப்பின் கோட்பாட்டு ரீதியான AI செயலாக்கத் திறனைக் காட்டுகிறது. அதாவது, ஒரு செக்கனில் எத்தனை ட்ரில்லியன் செயற்பாடுகளை அது கோட்பாட்டு ரீதியாகச் செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது. இந்த எண்ணிக்கையானது, அத்தொகுதியின் கணிப்பீட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டு, TOPS = AI compute cores × operations per clock cycle × clock frequency கணக்கிடப்படுகிறது.
வாகனங்கள் மென்பொருளைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் அமைப்புகளாக மாறுவதால், கணிப்பீட்டுத் திறனானது ஒரு வாகனம் என்ன செய்ய முடியும் என்பதில் ஒரு முக்கிய அங்கமாக மாறுகிறது. வாகனத்தின் கணிப்பீட்டுத் தளத்தை (computer platform) அதன் “மூளையாக” குறிப்பிடலாம். இது கெமராக்கள் மற்றும் ஏனைய சென்சர்களில் இருந்து வரும் தகவல்களைச் செயலாக்குவதுடன், அறிவார்ந்த செயற்பாடுகள், மேம்பட்ட சாரதி உதவி அமைப்புகள் (ADAS) மற்றும் AI மூலம் இயங்கும் அம்சங்களுக்கும் ஆதரவளிக்கிறது.
ஸ்மார்ட்போனில் உள்ள புரசெசர் பயன்பாடுகளை ஆதரித்தல், தகவல்களைச் செயலாக்குதல், புதிய அம்சங்களைச் சாத்தியமாக்குதல் போன்ற, மென்பொருள் மூலம் வரையறுக்கப்படும் வாகனத்தில் உள்ள கணனித் தளமானது அதன் நுண்ணறிவிற்கான அடித்தளத்தை வழங்குகிறது. குதிரை வலு, மின்கலத் திறன், ஆர்முடுக்கம், பயணிக்கும் தூர அளவு, சார்ஜிங் திறன் போன்ற வழக்கமான விடயங்களுடன் சேர்ந்ததாக, அடுத்த தலைமுறை வாகனங்களை நுகர்வோர் எவ்வாறு மதிப்பிடலாம் என்பதிலான ஒரு மாற்றத்தை இது குறிக்கிறது.
இது குறித்து Evolution Auto நிறுவனத்தின் பேச்சாளர் நுரான் சில்வா தெரிவிக்கையில், “வாகனத் துறையானது பிரதானமாக இயந்திர கட்டமைப்புகளால் வரையறுக்கப்பட்ட வாகனங்களில் இருந்து, மென்பொருள் மற்றும் கணிப்பீடு ஆகிய சாரதி அனுபவத்தின் மையமாக மாறும் வாகனங்களை நோக்கி நகர்கிறது. இதன் கருத்து, வழக்கமாக கார் ஒன்றை வாங்கும் விடயங்களில் இடம்பெறாத TOPS போன்ற அம்சங்கள் நுகர்வோருக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதாகும். XPENG L03 இல் 48 TOPS முதல், AVATR 07 இல் 100 TOPS வரை பரந்துபட்டுள்ள எமது வாகன வரிசையானது, அடுத்த தலைமுறை வாகனங்களில் தற்போது கிடைக்கும் கணிப்பீட்டுத் திறன்களைப் பிரதிபலிக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதுடன், வாகனப் பயன்பாடு பரிணமித்து வரும் நிலையில் நுகர்வோர் சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய வகையில் அவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எமது பொறுப்பு என நாம் நம்புகிறோம்.” என்றார்.
TOPS ஆனது வழக்கமாக AI திறன் அனுமானத்திற்காக INT8 துல்லியத்தைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. அத்துடன் இது உச்ச கோட்பாட்டு செயலாக்கத் திறனை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், அதிக TOPS எண்ணிக்கை கொண்டுள்ளமையானது, நிஜ உலகத்தில் வாகனம் ஒன்றின் செயற்பாட்டுத் திறனாக அமையாது. கணிப்பீட்டுத் திறன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது, மென்பொருளை உகந்த வகையில் செயலாக்குதல் (software optimisation), சென்சர் கட்டமைப்பு, வெப்ப முகாமைத்துவம், பரந்த கணிப்பீட்டுத் தளம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் அமைகிறது.
வாகனக் கட்டமைப்பு பரிணமிக்கும் போது, இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. பாரம்பரிய வாகனங்களில் வெவ்வேறு அமைப்புகளைக் கட்டுப்படுத்த பல இலத்திரனியல் கட்டுப்பாட்டு அலகுகள் (ECU) பயன்படுத்தப்படுகின்றன. மென்பொருள் மூலம் வரையறுக்கப்படும் வாகனங்கள், அதிகளவான மையப்படுத்தப்பட்ட கணனி கட்டமைப்புகளைப் பின்பற்றி அமைகின்றன. இது வாகனங்கள் எவ்வாறு இயங்குகின்றன; அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதில் மென்பொருள் மற்றும் கணிப்பீட்டுத் திறன் அதிக செல்வாக்கைச் செலுத்த உதவுகிறது என்பதைக்  காண்பிக்கிறது.
ஒரு மின்சார வாகனம் (EV) என்பது நுகர்வோருக்கு வெறுமனே மின்சார ஆற்றல் கட்டமைப்பை (electric powertrain) விட மேலானது என்பதே இதன் பொருளாகும். மின்கலத் திறன், பயணிக்கும் தூரம், சார்ஜிங் ஆகியன இப்போதும் முக்கியமான விடயங்களாக காணப்பட்ட போதிலும், கொள்வனவாளர்கள் வாகனத்தின் கணிப்பீட்டுத் திறன், AI, ADAS, சென்சர் ஒருங்கிணைப்பு, மென்பொருள் கட்டமைப்பு, கம்பியற்ற (OTA) புதுப்பித்தல் திறன்களையும் கருத்தில் கொள்ளலாம். இவை அனைத்தும் வாகனம் எவ்வளவு அறிவார்ந்த முறையில் இயங்க முடியும் என்பதோடு, காலப்போக்கில் அதன் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றமடைய முடியும் என்பதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
Evolution Auto நிறுவனத்தின் வாகன வரிசையானது, அதிகரித்து வரும் அம்சங்களுக்கான தெளிவான குறிப்பை வழங்கி, நுகர்வோருக்கு அதன் அடுத்த தலைமுறை வாகனங்களில் கிடைக்கும் AI கணிப்பீட்டுத் திறனின் எல்லையைப் பற்றிய தெளிவான பார்வையை அளிக்கிறது.
வழக்கமான உள்ளக எஞ்சின் எரியூட்டல் பொறிமுறை (ICE) வாகனங்களில் இருந்து, மின்சார வாகனங்களுக்கு (EVs) மாறும் நுகர்வோருக்கு, வாகனத் தொழில்நுட்பம் பற்றிய ஒரு பரந்த பார்வையை இது வழங்குகிறது. கொள்வனவுக்கான முடிவுகள் தற்போது வாகனத்தின் ஆற்றல் அமைப்பிற்கு மேலதிகமாக, வாகனத்தின் டிஜிட்டல் மற்றும் கணிப்பீட்டு கட்டமைப்பையும் உள்ளடக்கியதாக அமைகின்றன.
மென்பொருள் மூலம் வரையறுக்கப்படும் வாகனங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், வாகனங்கள் தொடர்பான துண்டுப் பிரசுரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்கமான விபரக்குறிப்புகளை விட நுகர்வோர் கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் காணப்படுகின்றன. ஒரு EV இன் கணிப்பீட்டுத் திறனை அறிவதன் மூலம்; மென்பொருள் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் பற்றிய நுண்ணறிவு, வாகனத்தின் தற்போதைய திறன்கள், எதிர்காலத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய பரந்த பார்வையைப் பெற உதவும்.
காரின் எதிர்காலமானது வெறுமனே மின்சாரமயமாக்கலில் மாத்திரம் தங்கியிருக்காது. அது மென்பொருளால் வரையறுக்கப்பட்டு, அறிவார்ந்ததாகவும், பரிணமிக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டதுமாகும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.evolutionauto.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 0777 553 355 ஊடாக அழைக்கவும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading