Jobs

Daraz Sri Lanka, இந்த ஆண்டின் மாபெரும் விற்பனைக் கொண்டாட்டமான 11.11 Big Boss Sale ஐ அறிமுகப்படுத்துகிறது.

 

120 க்கும் மேற்பட்ட BRANDS மற்றும் 11 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த விற்பனை நிகழ்வில் இணைந்துள்ளன. நவம்பர் 10ம் திகதி இரவு 8 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வில், Brand Rush Hour மற்றும் “Discount Pita Discount” (தள்ளுபடிக்கு மேல் தள்ளுபடி) போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

 

கொழும்பு, இலங்கை, 4 நவம்பர் 2026 – Daraz Sri Lanka தனது 11.11 Big Boss Sale நிகழ்வை நவம்பர் 10ம் திகதி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இதில் இலத்திரனியல் சாதனங்கள், நவநாகரிகம், அழகுசாதனப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பலவற்றிலும் வாடிக்கையாளர்கள் சிறந்த சலுகைகளைப் பெறலாம். நவம்பர் 21 வரை நடைபெறவுள்ள இந்த மிகப்பெரிய விற்பனை நிகழ்வில், 120 க்கும் மேற்பட்ட BRANDகளும் 11 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் பங்கேற்கின்றன. வாடிக்கையாளர்கள் வவுச்சர்கள், வங்கி அட்டை மூலம் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் வசதியான கட்டண முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பயனடையலாம்.

 

இந்தச் சலுகை, நவம்பர் 10ம் திகதி இரவு 8 மணி முதல் நவம்பர் 11ம் திகதி அதிகாலை 2 மணி வரை நடைபெறும் Brand Rush Hour உடன் தொடங்குகிறது. இந்த ஆறு மணி நேரக் காலக்கட்டத்தில், வாடிக்கையாளர்கள் Voucher Max மூலம் 15% நேரடி தள்ளுபடியையும், தகுதியான கொள்வனவுகளுக்கு KOKO மூலம் கூடுதலாக 30% தள்ளுபடியையும் அல்லது பங்கேற்கும் வங்கி அட்டைகள் மூலம் கூடுதலாக 25% தள்ளுபடியையும் பெறலாம். வாடிக்கையாளர்கள் Daraz app ல் தங்களுக்குரிய வவுச்சர்களைப் பெற்றுக்கொண்டு, பணம் செலுத்தும் போது தங்களுக்கு விருப்பமான தகுதியான கொடுப்பனவு முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

“11.11 என்பது இலங்கையில் ஷாப்பிங் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் முக்கிய விற்பனைக் கொண்டாட்டமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், வாடிக்கையாளர்களுக்கு இந்த அனுபவத்தை இன்னும் அதிக பலனளிப்பதாக மாற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். Big Boss மூலம், நாங்கள் பலதரப்பட்ட BRANDS, அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேமிப்பதற்கான பல வழிகளை ஒன்றிணைத்து, வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையை ஆவலுடன் எதிர்பார்க்க மேலும் பல சலுகைகளை வழங்குகிறோம். இலங்கையில் நாங்கள் ஒரு தசாப்தத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், உள்ளூர் வணிகங்கள் வளர்வதற்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்களுக்கு இணையவழி ஷொப்பிங்கை மிகவும் வசதியானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், மதிப்புமிக்கதாகவும் மாற்றுவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்,” என்று Daraz Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Rukshan Xavier கூறினார்.

 

இலங்கையில் தனது 10 ஆண்டு காலப் பயணத்தின் தொடர்ச்சியாக, முன்னணி BRANDS, உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் நிதிப் பங்காளர்களை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் Daraz தொடர்ந்து இணைத்து வருகிறது. Daraz-இன் ஆண்டின் மிகப்பெரிய சலுகைக் கொண்டாட்டமான 11.11, பங்கேற்கும் வணிகங்கள் தங்களது தயாரிப்புகளைப் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், பரந்த வாடிக்கையாளர் தளத்தைச் சென்றடைவதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

 

இந்த 11.11 ஆண்டின் மாபெரும் விற்பனையானது, வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், “Discount Pita Discount” (தள்ளுபடிக்கு மேல் தள்ளுபடி) என்ற அதிரடியான சலுகைச் செய்தியை முன்னிலைப்படுத்துகிறது.

தகுதியான தயாரிப்புச் சலுகைகளை, வவுச்சர் சேமிப்புகள் மற்றும் கொடுப்பனவுச் சலுகைகளுடன் இணைத்து எவ்வாறு கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பதை இந்த அணுகுமுறை உணர்த்துகிறது. அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவது, பரிசுகளைத் தேர்ந்தெடுப்பது அல்லது பெரிய அளவிலான பொருட்களை வாங்குவது என எதுவாக இருந்தாலும், இந்த கூடுதல் தள்ளுபடிகள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மதிப்பைப் பெற்றுத் தருகின்றன.

 

இந்த ஆண்டின் Platinum பங்காளர்களான  ANKER, Marvel Marketing, Celcius Solutions, Swisstek, Hayleys, Diamond Best Foods, Hemas மற்றும் Unilever ஆகிய நிறுவனங்களின் 11.11 சலுகைகளை வாடிக்கையாளர்கள் கண்டறியலாம். இந்தப் மாபெரும் விற்பனையின் கீழ், அன்றாடத் தேவைகள், தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பலதரப்பட்ட தயாரிப்புகள் கிடைக்கின்றன.

 

மேலும், இந்த ஆண்டின் 11.11 நிகழ்வில் 11 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதில் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, இலங்கை வங்கி, கார்கில்ஸ் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, யூனியன் வங்கி, LOLC Finance, DFCC வங்கி, பான் ஏசியா வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை அவற்றுள் அடங்கும். வாடிக்கையாளர்கள் இந்தப் ஊக்குவிப்புப் பிரச்சாரம் முழுவதும் பல்வேறு வங்கி அட்டைச் சலுகைகளைப் பெறலாம். ஒவ்வொரு வங்கியின் தள்ளுபடி விபரங்கள், தகுதிக்கான நிபந்தனைகள் மற்றும் சலுகைக் காலங்கள் குறித்த தகவல்களை Daraz app ன் மூலமாகத்  தெரிந்துகொள்ளலாம்.

 

KOKO வைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள், தகுதியான கொடுப்பனவுகளை மூன்று அல்லது ஆறு தவணைகளாகப் பிரித்துச் செலுத்தலாம். பங்கேற்கும் வங்கிகள், வாங்கும் பொருள், வங்கி அட்டை மற்றும் அதை வழங்கிய வங்கியைப் பொறுத்து, 60 மாதங்கள் வரையிலான தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களையும் வழங்குகின்றன. இந்த தெரிவுகள், விலைமதிப்பு மிக்க வீட்டுப் பொருட்கள் உட்பட, தகுதியான கொள்வனவுகளின் செலவைப் தவணை முறையில் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கின்றன.

 

விற்பனைத் தொடக்கத்திற்கு முன்னதாக, வாடிக்கையாளர்கள் Daraz app ஐப் பார்வையிடலாம், பொருட்களை ஒப்பிடலாம் மற்றும் தங்களுக்கு விருப்பமான பொருட்களைத் தங்கள் விருப்பப் பட்டியல்களில் சேமிக்கலாம். வவுச்சர்களைச் சேகரிப்பதும், கொடுப்பனவுத் தகுதி மற்றும் தவணைக் கொடுப்பனவு விதிமுறைகளை முன்கூட்டியே மதிப்பாய்வு செய்வதும், Brand Rush Hour ஊக்குவிப்புக்குத் தயாராவதற்கும், தங்கள் கொள்வனவுகளுக்குப் பொருத்தமான சலுகைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு அது உதவும்.

 

Brand Rush Hour முடிந்த பிறகு, 11.11 Big Boss Sale விற்பனை நவம்பர் 21 வரை தொடரும். முழுமையான சிறப்புச் சலுகை விபரங்கள் மற்றும் சலுகை விதிமுறைகள் Daraz app ல் கிடைக்கும்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading