World

அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் அதிகரித்த கொரோனா வைரஸ்

உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து, 700ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் ஒரேநாளில் 139 பேர் இந்த கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய வைரஸ் அமெரிக்காவில் வேகத்தில் பரவிவருவதால், மாஸ்குகள் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவை பதுக்குவதை தவிர்க்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading