World

அமெரிக்காவில் ஜெட் விபத்து.. 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கிரெஸ்ட்கேவன் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் லியர் ஜெட் 60 ரக தனியார் விமானம்  ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் ஏற்பட்ட லியர் ஜெட் விபத்து.. 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | America Florida Learjet Crash 9 Death

இந்த விமானம் டெக்சாஸில் இருந்து பஹாமாஸ் தீவுகளை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விபத்து குறித்து அமெரிக்கா போக்குவரத்துறை செயலாளர் சீன் டஃபி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பது, “கிரெஸ்ட்கேவன் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. இது ஒரு கொடூரமான பேரிடர்” என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் ஏற்பட்ட லியர் ஜெட் விபத்து.. 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | America Florida Learjet Crash 9 Death

டெக்சாஸில் உள்ள ஆஸ்டின் – பெர்க்ஸ்டோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், பஹாமாஸில் உள்ள நார்த் எலியூரா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்ததாக கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் ஏற்பட்ட லியர் ஜெட் விபத்து.. 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | America Florida Learjet Crash 9 Death

விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், லியர் ஜெட் சொகுசு விமான விபத்தின் பதறவைக்கும் கடைசி நிமிட ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் (ATC) குரல் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading