Local

அமெரிக்காவில் மானத்தை வாங்கிய இலங்கை அழகிகள்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் ஸ்ரீலங்கன் நியூயோர்க் அழகிப்போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல் முறையாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகி போட்டி நடத்தப்பட்ட நிலையில் அங்கு இலங்கையர்கள் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டுள்ளனர்.

இந்த போட்டியில் மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகியாக ஏஞ்சலியா குணசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

எவ்வாறாயினும் இந்த போட்டியின் பின்னர் நடந்த விருந்துக்கு பிறகு இருத்தரப்புக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவு மற்றும் குயின்ஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் இரு தரப்புக்கும் இடையிலேயே இந்த  மோதல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை  அடுத்து எதிர்காலத்தில் ஸ்டேட்டன் தீவில் உள்ள ஐந்து சொகுசு நிகழ்வு அரங்குகளில், இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்வையும் நடத்த அனுமதிக்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மண்டபத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மோதலில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். பலர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading