Sports

அமெரிக்காவை வீழ்த்தி துருக்கி வெற்றி

2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி துருக்கி த்ரில் வெற்றியீட்டியுள்ளது.

இன்று காலை 7.30 மணிக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின.

ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஒஸ்டன் ட்ரஸ்டி கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார்.

பின்னடைவை சந்தித்த துருக்கி விரைவில் மீண்டு வந்தது. 10-வது நிமிடத்தில் அர்தா குலர் கோல் ஒன்றை அடித்து சமன் செய்தார்.

இதனைத் தொடர்ந்து 31-வது நிமிடத்தில் ஓர்குன் கோக்சு கோல் அடித்து துருக்கியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

இதனால் முதல் பாதி முடிவில் துருக்கி ஒரு கோல் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அமெரிக்கா, செபாஸ்டியன் பெர்ஹால்டர் அடித்த கோலின் மூலம் ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது.

அதன்பிறகு வெற்றிக்கான கோலை அடிக்க இரு அணிகளும் கடுமையாக முயன்றது.

அப்போது ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் துருக்கி வீரர் கான் அய்ஹான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதேவேளை டி பிரிவின் மற்றுமொரு லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பெரகுவே ஆகிய அணிகள் மோதின.

இந்தப் போட்டி எவ்வித கோலையும் பெறாமல் சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading