Local

அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் 6 பேர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகே ஜூலை 4 சுதந்திர தின அணிவகுப்பில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகோகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திரதின அணிவகுப்பு  காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. 

சுதந்திரதின அணிவகுப்பில் கலந்துகொண்டிருந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர். 

இத் துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் துரிதபடுத்தியுள்ளனர். 

இத் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading