World

அமெரிக்க ஜனாதிபதியாக யார் வந்தாலும் எங்கள் கொள்கை மாறாது!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் ஆயத்துல்லா அலி கொமைனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வந்தார். ஒபாமா காலத்தில் கையெழுத்தான ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கடந்த 2018ஆம் ஆண்டு அவர் அறிவித்தார்.

மேலும் அவர் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். இந்த சூழலில் நேற்று அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுள்ளது.

இது டிரம்ப் மேலும் 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்க போகிறாரா அல்லது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்ற போகிறாரா என்பதை தீர்மானிக்க உள்ளது. டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அவர் ஈரானுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் ஆயத்துல்லா அலி கொமைனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் “அமெரிக்காவுடனான எங்கள் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த தனிப்பட்ட நபரை சார்ந்தும் அது மாறாது. அமெரிக்க ஜனாதிபதியாக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading