World

அமெரிக்க வைத்தியசாலைக்குள் கத்திக்குத்து பலர் ஆபத்தான நிலையில்!

அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்தியசாலை ஒன்றுக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

San Fernando Valley வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலை வளாகத்தில் உள்ள Ventura Boulevard 16000 தொகுதியில் கத்திக்குத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மூவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது.  தாக்குதல் நடத்தியவர் மாலை 5 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

இதேவேளை, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களாக இவ்வாறான தொடர் குற்றச்சாட்டுகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading