Local

அமைச்சர் பிரசன்னவின் மகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர் கைது!

இலங்கையில் அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவின் மகளின் இரத்தினக்கல் பதித்த மோதிரத்தை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பதித்த மோதிரமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

அமைச்சரின் மகள், தனது கணவர் மற்றும் சிலருடன் சுற்றுலா சென்றிருந்த வேளை அப்பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலின் குளியலறையில் தன் மோதிரத்தைக் கழற்றி அறையின் சுவரில் வைத்துள்ளார்.

ஹோட்டலுக்குள் பாம்பு வந்துவிட்டது என்று கூச்சலிட்டு குளியலறையில் இருந்து ஒருவர் ஓடிவந்தார், திரும்பி வந்து பார்த்தபோது மோதிரம் காணாமல் போயிருந்தது.

ஹோட்டலின் கமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அதை யாரோ திருடிச் சென்றமை தெரியவந்தது.

குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு மேசன் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading