அமைச்சின் 18 வாகனங்களை தனது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்திய அமைச்சர்!

அமைச்சின் 18 வாகனங்களை தனது தனிப்பட்ட பாவனைக்கு அமைச்சர் ஒருவர் பயன்படுத்தியுள்ளார் என நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு கிடைக்கும் வாகன உரிமங்களை விற்பனை செய்து, அமைச்சுகளுக்கு சொகுசு வாகனங்களை வாங்குகின்றார்கள்.
பின்னர் அவர்களை சுரண்டுகிறார்கள். இவற்றை வெளிப்படுத்தும் போது அவற்றை வெளிப்படுத்திய நபர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.
அமைச்சர்கள் நாட்டின் சொத்துக்களை திருடி தான் பொருளாதாரத்தை அழித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
