Local

அம்பானி மனைவி கற்பித்த பாடம்!

 

இந்திய பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, இலங்கைக்கு தனியார் ஜெட் விமானத்தில் பறந்து சென்று ஆயிரக்கணக்கான பாத்திரங்களை வாங்கிய சம்பவம் பல முக்கிய பாடங்களை கற்றுத்தருகின்றது.

பல வருடங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தாலும், பணத்தினை சிக்கனமாக செலவிட வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகின்றது.

நீதா அம்பானி ஜப்பானின் பிரபலமான நோரிட்டேக் (Noritake) பிராண்டின் சீரான சமையல் மற்றும் உணவுப் பாத்திரங்களை வாங்குவதற்காக இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். நோரிட்டேக்கின் மிகப்பெரிய உற்பத்தி நிலையம் இலங்கையில்தான் அமைந்துள்ளது. இங்கே அந்தப் பொருட்கள் இந்தியாவை விட 70 முதல் 80 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கின்றது.

அவரது ஓர்டர் அளவு சுமார் 25,000 பாத்திரங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கம் மற்றும் பிளாட்டினம் அலங்காரங்களுடன் கூடிய 50 பீஸ் டின்னர் செட் ஒன்றின் விலை இலங்கையில் சுமார் 300 முதல் 500 அமெரிக்க டொலர்கள். ஆனால் அதே பொருள் இந்தியாவில் 800 முதல் 2,000 டொலர்கள் ஆகும்.

இதன் மூலம் நீதா அம்பானி மிகப்பெரிய தொகையைச் சேமித்துள்ளதாகவும், பொருட்களை நேரடியாக இலங்கையிலிருந்து வாங்கி இந்தியாவுக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தி, ஆடம்பர வாழ்க்கை வாழும் நீதா அம்பானி கூட விலை வேறுபாட்டை கவனித்து புத்திசாலித்தனமான கொள்முதல் முடிவெடுத்தார் என சமூக வலைதளங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading