Cinema

அம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்

அம்மா பக்கத்து அறையில் இருக்கும்போதே நடிகையின் ஆடையை அவிழ்த்து சில்மிஷம் செய்துள்ளார் பிரபல இயக்குனர் சஜித் கான்.

பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது 3 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். நடிகைகள், பெண் பத்திரிகையாளர் முன்பு தனது மர்ம உறுப்பை காட்டி அட்டகாசம் செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் சுரி சஜித் கான் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் சஜித் கான் பற்றி கூறியிருப்பதாவது,

ஆடிஷன் 2012ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. ஹிம்மத்வாலா படத்திற்கு நடிகர், நடிககைளை தேர்வு செய்து கொண்டிருந்தார். ஆடிஷனுக்காக தனது வீட்டிற்கு வருமாறு சஜித் கான் எனக்கு போன் செய்தார். நானும் அவர் வீட்டிற்கு சென்றேன். அவர் டிரெட்மில்லில் இருந்தார். என் உடம்பை பார், எவ்வளவு நன்றாக உள்ளது என்றார்.

இயக்குனர் ஆடிஷனுக்கு வரச் சொல்லிவிட்டு இந்த சஜித் கான் ஏன் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். சிறிது நேரத்தில் அவர் என்னை ஆடையை அவிழ்க்குமாறு கூறினார். நான் தான் இயக்குனர். உங்களின் உடம்பை பார்க்க வேண்டும் என்றார். நான் ஆடையை அவிழ்க்காமல் நின்று கொண்டிருந்தேன்.

சஜித் கான் என் மேலாடை கீழே இழுத்து அவிழ்க்கப் பார்த்தார். உடம்பை காட்டு, இதில் என்ன இருக்கிறது என்றார். நான் அதிர்ச்சி அடைந்து அவரை திட்டத் துவங்கினேன். எனக்கு அழுகை வந்துவிட்டது. உடனே அவர் கத்தாதே, பக்கத்து அறையில் என் அம்மா இருக்கிறார். அவர் காதில் விழுந்துவிடப் போகிறது என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading