அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காத உத்தமர்கள் மாட்டிக்கொள்வது மக்கள்!

பாராளுமன்றம் நுழைந்த எந்தவொரு உறுப்பினரும் சிறைச்சாலையில் தொடர்ந்து இருப்பதில்லை. அவர் உள்ளே போய் வருவது ஒரு கண்துடைப்பும் மக்கள் ஆதரவுக்கான தேவைப்பாடுமாகும்.
கோடிக்கணக்கான ரூபா கொள்ளை, பல கொலை என படுபயங்கரக் குற்றம் செய்யும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் குற்றமும் நிரூபிக்கப்படுவதில்லை. அதற்காக அவர் தண்டிக்கப்படுவதும் இல்லை.
மகா ஜனங்களுக்கு ஒரு படம் காட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைக் கொஞ்சம் உள்ளே போட்டு எடுக்கும். அவ்வளவுதான். பின்னர் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியானதும் நன்றி விசுவாசமாக இவ்வாறே தொடரும்.
கள்ளக் கூட்டம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மாட்டாது. சும்மா முசுப்புக்கு சின்னதாக அல்லது சம்பந்தமில்லாத குற்றத்தை சுமத்தி சிலகாலம் உள்ளே போட்டு மக்கள் மறந்ததும் வெளியே விட்டு படத்தை முடித்திடும்.
பாவம் மகாஜனங்கள். மடையர்களைப் போல சரி, பிழை பேசிக் கொண்டிருப்பார்கள். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உள்ளே பல டீல்களை வைத்திருப்பார்கள். அதெல்லாம் மகா ஜனங்களுக்கு தெரிய வராது. புரிந்துகொள்ளவும் மாட்டார்கள். இது அரசியல்வாதிக்கு நன்றாகத் தெரியும்.
