Jobs

அரச ஊழியர்களுக்கான அக்ரஹார நன்மைகளை வலுப்படுத்துவதற்காக NITF உடனான புரிந்துணர்வு உடன்படிக்கை

 

மத்திய மாகாணத்தில் மருத்துவ சேவைகளை வழங்குவதில் மிகவும் நம்பிக்கைக்குரிய நாமங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற கண்டி சுவசெவன வைத்தியசாலை (Suwasevana Hospital), 1985 ஆகஸ்ட் 1ம் திகதி முதல் இயங்க ஆரம்பித்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் மகத்துவத்தை நிலைநாட்டியுள்ளது. அக்ரஹார காப்புறுதித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை அரச ஊழியர்களுக்கு இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய, நம்பகமான, மற்றும் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கப்பெறுவதில் பகிர்ந்து கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துடனான (National Insurance Trust Fund – NITF) தனது புரிந்துணர்வு உடன்படிக்கையை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்துள்ளது.

 

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக புதுப்பிப்பதற்காக கைச்சாத்திடும் வைபவம் 2026 ஜனவரி 6 அன்று இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இடம்பெற்றது. அரச துறை ஊழியர்களுக்கு மேம்பட்ட மருத்துவ நன்மைகள் மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இக்கூட்டாண்மை, விசேட மருத்துவ சேவைகளை சிக்கனமாகவும், அதிகரித்த அளவிலும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது.

கைச்சாத்திடும் நிகழ்வில், சுவசெவன வைத்தியசாலையின் சார்பில் திரு. ஸ்ரீமத் வெலிவிட்ட, வணிக மேம்பாட்டுத் துறை தலைவர், நிலு வேரகம, வணிகச் செயல்பாடுகளுக்கான தலைவர், மற்றும் திரு. அஷான் பிரேமசந்திர, வணிக மேம்பாட்டு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் கீழான அக்ரஹார காப்புறுதியின் சார்பில் திருமதி கமானி லியனாராச்சி, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. சமில் துஷார, உதவிப் பொது முகாமையாளர் (செயல்பாடுகள்), திரு. நுவான் திசாநாயக்க, உதவி முகாமையாளர் (சந்தைப்படுத்தல்), மற்றும் பிரதிபா வெலிகன்ன, பணிப்பாளர் சபை காரியதரிசி மற்றும் உதவி முகாமையாளர் (சட்டம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

புதுப்பிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், அக்ரஹார காப்புறுதியைக் கொண்டுள்ள அரச ஊழியர்கள் சுவசெவன வைத்தியசாலையில் பல்வகைப்பட்ட நன்மைகளைப்  பெற்றுக்கொள்ளும் தகைமையைக் கொண்டுள்ளனர். அனுமதிக் கட்டணம் இலவசம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது இலவசம், தங்கும் அறைகளுக்கு 20 சதவீத தள்ளுபடி ஆகியன அவற்றுள் அடங்கியுள்ளன. தங்கியிருந்து சிசிக்சை பெறுகின்ற மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு வருகின்றவர்களுக்கு CT, USS, MRI, Mammogram, Dexa Scan, மற்றும் X Ray உள்ளிட்ட ஆய்வுகூட மருத்துவ சோதனைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி, தங்கியிருந்து சிசிக்சை பெறுகின்ற மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு வருகின்றவர்களுக்கு ECHO மற்றும் ECG உள்ளிட்ட இருதய பரிசோதனைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி ஆகியனவும் அடங்கியுள்ளன. இவற்றை விட, மருத்துவ தொழில்சார் கட்டணங்கள் நீங்கலாக, 10 கிலோமீட்டர் வரையான தூரத்திற்கு எவ்விதமான கட்டணங்களுமின்றி அம்பியுலன்ஸ் சேவை வழங்கப்படுகின்றது. CABG, Coronary Artery Bypass Graft சிகிச்சைகளுக்கு ரூபா 50,000 நன்மையும் வழங்கப்படுகின்றது.

 

சுவசெவன வைத்தியசாலையின் வணிக மேம்பாட்டுத் துறை தலைவர் திரு. ஸ்ரீமத் வெலிவிட்ட அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “அக்ரஹார காப்புறுதியைக் கொண்டுள்ள அரச ஊழியர்களுக்கு முக்கியமான மருத்துவ சேவைகளுக்கு வெளிப்படையான, செலவைக் குறைக்கும் நன்மைகளை வழங்க உதவுவதில் எமது ஆற்றலை NITF உடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை எமக்கு வழங்குகின்றது. தரமான மருத்துவ சேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பதில் கவனம் செலுத்தியவாறு, நம்பிக்கைக்குப் பெயர்பெற்ற சுவசெவன வைத்தியசாலையின் தராதரங்கள் மற்றும் நோயாளர் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை தொடர்ந்தும் சிறப்பாகப் பேணுவதற்கு வழிவகுத்துள்ள நடைமுறைக்கு ஏற்ற கூட்டாண்மையாக இது காணப்படுகின்றது.”

இலங்கையில் மருத்துவ சேவைக் கட்டமைப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கி. தேசத்தின் அரச துறை ஊழியர்களின் நலனுக்கு உதவுகின்ற கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதில் சுவசெவன வைத்தியசாலையின் தொடர்ச்சியான கவனத்தை புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading