Local

அர்ஜுன மற்றும் தம்மிகவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை மாநாட்டை மே மாதம் 15ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் திகதி குறித்தது.

2017 – 2018 காலப்பகுதியில், ஆறு மாத காலத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நாட்டிற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 03 நீண்டகால டெண்டர்களை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக அதிக விலையிலான 27 உடனடி டெண்டர்களை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக, கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் அதற்குத் துணையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading