Local

அலி சப்ரிகளால் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்!

ஒரே பெயர்களைக் கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குழப்பம் காரணமாக இடம்பெற்ற தவறு தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் பேசப்பட்டது.

நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவிருந்தது.

ஆனால் முஸ்லிம் தேசிய கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அலி சப்ரி ரஹீம் தெரிவுக் குழுவுக்கு நியமிக்கப்பட்டதாக கடிதத்தை வெளியிட்டதால் பாராளுமன்ற அதிகாரிகள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்ட எம்.பி. மரிக்கர், தவறான நபருக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை ரத்து செய்வதற்கான உரிமைகோரல் செல்லுபடியாகுமா என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களின் ஒத்த பெயர்களின் குழப்பம் காரணமாக ஏற்பட்ட ஒரு பிழை என்று சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன இதற்கு விளக்கம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், தனது வாக்காளர்களுக்கு தான் பாராளுமன்றில் Active பாத்திரமாக இயங்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading