அவதூறு கருத்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை A R Rahman தரப்பு அறிவிப்பு!
இசையமைப்பாளர் AR ரஹமான் தம்பதிகளின் விவாகரத்து அறிவிப்பை அடுத்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான அவதூறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என AR ரஹமான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களை கொண்ட சமூக ஊடக பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
அதன்படி அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டபூர்வமாக வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You must be logged in to post a comment.