World

ஆக்சிஜன் இல்லாமல் தவித்த கணவருக்கு வாயோடு வாயாக சுவாசம் கொடுத்த மனைவி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறிய கணவருக்கு வாயோடு வாயாக சுவாசம் அளிக்க முயன்ற மனைவி ஒருவரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.. மேலும் அவரது முயற்சி பலனளிக்காமல் கணவர் இறந்து போன சோக நிகழ்வு நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா பகுதியை சேர்ந்த ரவி சிங்கால் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு உள்ளார். உடனடியாக அவரது மனைவி ரேணு சிங்கால் தனது கணவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மூச்சுத் திணறல் அதிகமானதால் வாயோடு வாய் வைத்து தனது கணவருக்கு ஆக்சிஜன் கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மருத்துவமனை செல்லும் முன்னரே அவர் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading