World

ஆடம்பர வாழ்க்கைக்காக சொந்த குடும்பத்தையே கொன்ற கொடூரன்..!!

சொத்துக்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் சொந்தக் குடும்பத்தையே விஷம் வைத்துக் கொல்ல முயன்ற ஒரு மகனின் கொடூரமான சம்பவம்..

2020 ஆகஸ்ட் மாதம், கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஆன்மரியா திடீரென வயிற்று வலியால் துடித்து உயிரிழந்தார். ஆரம்பத்தில் மஞ்சள் காமாலை என்று நினைத்த மருத்துவர்களுக்கு, ஆன்மரியாவின் தந்தை பென்னியும் அதே தீவிர அறிகுறிகளுடன் உயிருக்கு போராடியபோதுதான் சந்தேகம் வந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி காத்திருந்தது! ஆன்மரியாவின் உடலில் அதிக அளவில் எலி விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் கூர்மையான பார்வை, குடும்பத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் உலவிக் கொண்டிருந்த 22 வயது ம*கன் ஆல்பின் பென்னி மீது திரும்பியது. அவனது மொபைல் போனை சோதித்தபோது, “எலி விஷம் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?”, “கல்லீரலை விஷம் எப்படி பாதிக்கும்?” என்று கூகுளில் அவன் தேடியது அம்பலமானது.

குடும்பச் சொத்துக்கள் அனைத்தும் தனக்கே கிடைக்க வேண்டும், காதலியுடன் ஜாலியாக ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவனது திட்டம். வீட்டில் தயாரித்த ஐஸ்கிரீமில் எலி விஷத்தைக் கலந்து தந்தைக்கும் தங்கைக்கும் கொடுத்திருக்கிறான்.

நல்வாய்ப்பாக தாய் அதைச் சாப்பிடாததால் உயிர் தப்பினார். ஆடம்பர ஆசைக்காக பெத்த தந்தையையும் பிறந்த தங்கையையும் பலிகடா ஆக்கிய அந்தப் பாவி இறுதியாகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

பண ஆசை பிடித்த மனித மிருகங்களால் சொந்தக் குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்லாத ஒரு பயங்கரமான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்திய சம்பவம் இது!

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading