Gossip

ஆடு வெட்டுவதாக நினைத்து ஆணுருப்பை வெட்டிக்கொண்ட நபர்!

ஜெய்ஹிந்த் படத்தில் வரும் கவுண்டமணி பாணியில் தூக்கத்தில் கனவு கண்டு தனக்கு தானே விணை தேடிக்கொண்டுள்ளார் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டைச் சேர்ந்த ஒரு விவசாயி.

ஆப்ரிக்க நாடான கானாவில் வசித்துவருபர் கோபி அட்டா. இவர் ஒரு விவசாயி.

34 வயதான கோஃபி அட்டா, மதிய நேரம், நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கியுள்ளார். அந்த நேரம் இவருக்கு கனவு வந்ததாகவும் அதில், அவரே ஆடு வெட்டுவதாகவும் அவருக்கு தோன்றியுள்ளது.

அப்போது அவர் கையில் இருந்த கத்தியால் தனது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை(testicles) தவறுதலாக வெட்டியுள்ளார்.

வலியால் கனவு கலைந்த நிலையில், தனக்கு நேர்ந்த அவலத்தை நினைத்து பதறிப்போனார் கோஃபி.

இந்த நேரத்தில் அவரது மனைவியும் வீட்டில் இல்லை. ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த கோஃபியை அவரது சுற்றத்தார் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

நல்ல வேளையாக அவரது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்படாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது ஓய்வில் உள்ள அவர் தன் கையில் எப்படி கத்தி வந்தது? நான் எப்படி இதை செய்தேன்? என தெரிவில்லை என்றுள்ளார்.

இவருக்கு மேற்படி ஒரு அறுவை சிகிச்சைசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை முடிந்து சுமார் ஒன்றரை மாதம் முறையாக ஓய்வெடுத்தால் இயல்பாக செயல்பட தொடங்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கோஃபி தனது உயர் சிகிச்சைக்காக தற்போது நிதி திரட்டி வருகிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading