Sports

ஆட்ட நிர்ணய சதியில் சிக்கிய இந்திய கிரிக்கட் அணி முகாமையாளர்கள்

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் அணி முகாமையாளர்கள் இருவருக்கு நாட்டை விட்டும் வெளியேற தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் லெஜண்ட் கிரிக்கெட் கிண்ணம் – 2024 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

குறித்த போட்டிகளில் இந்திய கிரிக்கெட்  அணி முகாமையாளர்கள் இருவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாகவும், போட்டிகளை விட்டுக்கொடுக்குமாறு விளையாட்டு வீரர்களை நிர்ப்பந்தம் செய்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

விசேட விசாரணை

இந்நிலையில் விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது.

ஆட்ட நிர்ணய சதியில் சிக்கிய இந்திய கிரிக்கட் அணி முகாமையாளர்கள் | Indian Cricket Team Managers Caught Match Fixing

அதன் போது குறித்த இரண்டு முகாமையாளர்களும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து, கொழு்ம்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading