World

ஆப்கானில் அமெரிக்க தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி!

காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரே ஆப்கானிஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்த பிஞ்சு குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதல்களுக்கு இடையில், பல குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செமரே அஹ்மதி (Zemaray Ahmadi) எனும் 36 வயது தந்தை, அவரது மூன்று மகன்கள் ஜாமீர் (20), பைசல் (16) மற்றும் ஃபர்சாத் (12) ஆகியோருடன் கொல்லப்பட்டார்.

அத்துடன், அவரது 6 மருமகன் மற்றும் மருமகள்களும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதில் இரண்டு வயதில் ஒரு ஆண் மற்றும் பெண், ஐந்து மற்றும் ஏழு வயது பெண்கள், ஆறு வயது ஆண் மற்றும் 28 வயது ஆண் ஆகியோர் உள்ளடங்குவர்.

அஹ்மதி காபூலில் உள்ள ஒரு வெளிநாட்டு அமைப்பில் தொழில்நுட்ப பொறியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading