World

ஆப்கானை விட்டு வெளியேறு – அமெரிக்கப் படைகளுக்கு தலிபான் எச்சரிக்கை!

ஆப்கானைவிட்டு வெளியேறுங்கள் அல்லது சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என அமெரிக்காவிற்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளூர் படையுடன் இணைந்து அமெரிக்க இராணுவமும் போராடி வருகிறது.
ஆப்கானிஸ்தானில்  அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.
இதற்கிடையே  தலிபான்களின் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதம் வழங்கி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்க படைகள் தொடர்ந்து அவமானங்களை சந்தித்து வருகிறது. அதன் மூலம் நல்ல பாடம் கற்றிருக்கும். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாவிட்டால் தலிபான்களால் வீழ்த்தப்படுவார்கள்.
1980–களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமைதான் அமெரிக்க படைகளுக்கும். எனவே தலிபான்களை ஒடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை கைவிட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுங்கள் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading