Local

ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்

ஆயிரம் ரூபா தொடர்பில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை (13) நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் , பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் , அரசாங்க தரப்பினர் என மூன்று தரப்புகளும் நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்தனர்.

இந்நிலையிலேயே நிகழ்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் குறைந்தபட்ச வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் பிறப்பித்திருந்தார்.

இதன்படி பெருந்தோட்டக்கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கும், பெருந்தோட்டத்துறை அமைச்சருக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading