Local

ஆளுநர் பதவி இல்லை – ரெஜினோல்ட் குரே, நிலுக்கா அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமனம்!

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ,சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க ஆகியோர் இரு அரச நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்குமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுதந்திரக்கட்சிக்கு எதிராக அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை கு றிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading