World

இங்கிலாந்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்கின் கொம்பு கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்கின் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மான்மவுத்ஷையர் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழில் செய்து வந்த சகோதரர்கள் ஆற்றங்கரையில் இரண்டடி நீளம் கொண்ட கொம்பு போன்ற விநோதமான ஒரு பொருளை கண்டெடுத்தனர். இதனை கண்ட தொல்லியல் துறையினர் அதனை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

முதற்கட்ட ஆய்வில் அந்த கொம்பு 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நியோலித்திக் காலகட்டத்தில் வாழ்ந்த ஆரோக்ஸ் இனத்தை சேர்ந்த மாட்டின் கொம்பாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொம்புகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading