Sports

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டன்
ஓவலில் நடந்து வந்தது. இதில், முதல் இன்னிங்சில் இந்திய அணி, 191 ரன்களும், இங்கி லாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை
தொடங்கிய இந்திய அணி, அபாரமாக ஆடி 466 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரோகித் சர்மா, அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 127 ரன்களும் புஜாரா 61 ரன்களும்
ஷர்துல் தாகூர் 60 ரன்களும் ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர். பின்னர் 2 வது இன் னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், விக்கெட்
இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. ஹசீப் ஹமீத் 43 ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ் 31
ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அரைசதம் அடித்த நிலையில் பர்ன்ஸ் விக்கெட் டை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். அடுத்த வந்த மலான் ரன் அவுட் ஆக, பின்னர்  ஜோ ரூட் வந்தார். இதற்கிடையே சிறப்பாக ஆடி வந்த ஹசீப் ஹமீத்தை (63 ரன்), ஜடேஜா போல்டாக் கினார்.

அடுத்த வந்த ஒலி போப் மற்றும் பேர்ஸ்டோ  விக்கெட்டுகளை அடுத்தடுத்து பும்ரா வீழ்த்த, மொயின் அலி விக்கெட்டை ஜடேஜா தூக்கினார். கேப்டன் ஜோ ரூட்டை ஷர்துல் கிளீன் போல்டாக்கினார்.

பின்னர் களத்துக்கு வந்த கிறிஸ் வோக்ஸும் கிரேக் ஓவர்டோனும் சிறிது நிதானமாக ஆடினர். அவர்களின் விக்கெட்டை வீழ்த்திய உமேஷ் யாதவ், அடுத்து ஆண்டர்சன் விக் கெட்டையும் கைப்பற்றினார். இதையடுத்து 210 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக் கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்திய அணி தரப்பில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading