Local

இடைக்கால அரசமைத்து தேர்தலை நடத்துக – மஹிந்த, ரணிலிடம் சங்க சபைகள் கோரிக்கை

அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் புத்தசாசன பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசியல் குழப்பத்தால் தேர்தலொன்றுக்கு தேர்வதற்கு பிரதான கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. எனவே, தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அரசொன்றை அமைப்பதே சிறந்தது . மாறாக நாடாளுமன்றத்தைக்கூட்டி நடவடிக்கை எடுத்தால் மீண்டும் பிரச்சினை தலைதூக்கும்.

இதனால், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பாராளுமன்ற அமர்வுகளை நடாத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சியம் பீடத்தின் மல்வத்து பிரிவு, அஸ்கிரி பிரிவு , அமரபுர பீடம் மற்றும் ராமங்ஞ்ஞா பீடம் ஆகிய பீடங்களின் மகாநாயக்கர்களின் நிறைவேற்றுக் குழு மற்றும் திவியாகஹ யசஸ்ஸி தேரர் ஆகியோரை உள்ளடக்கிய புத்தசாசன பணிக்குழுவே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading