World

இத்தாலியில் 2600 மருத்துவ சேவை பிரிவினருக்கு கொரோனா வைரஸ்

இத்தாலியில் சுமார் 2,600 மருத்துவ சேவை பிரிவினருக்கு( மருத்துவர்கள், தாதிகள், ஏனையோர்) கொரோனா பரவியுள்ளது. இதனால் கொரோனா பரவியுள்ள சாதாரன மனிதர்களுக்கு மருத்துவம் செய்ய மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேலதிக ராணுவத்தை குவித்து வருகிறது இத்தாலி. ராணுவத்தில் இருக்கும் மருத்துவ சேவைப் பிரிவினர் தற்போது களத்தில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இறந்த உடல்களை சவக்காலைக்கு கொண்டு சென்று புதைக்கும் நடவடிக்கைகளையும், தற்போது இத்தாலி ராணுவமே பொறுப்பேற்று செய்து வருகிறது. மருத்துவர்கள் முழு முகமூடி அணிந்து. ஆக்சிஜனை சூவாசித்துக்கொண்டு. மிக மிக அவதானமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எப்படி கொரோனா தொற்றியது என்பது பெரும் அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading