LocalWorld

இத்தாலி நாட்டில் கொரோனா நோயாளர் பலரை குணப்படுத்தி பின்னர் மரணித்த தம்பதியினர்

இவர்களிருவரும் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்கள்.இருவரும் கணவன் மனைவியும் ஆவார்கள்.

பல நாட்களாக கொரோனோ தொற்றாளர்களுக்கு மருத்துவம் பார்த்து 134 பேரை குணப்படுத்தியிருக்கிறார்கள்.

கடந்த எட்டாம் தேதி இவர்களிருவருக்கும் கொரோனோ தொற்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் அவர்களிருவரின் நிலையும் கவலைக்கிடமாகியுள்ளது. இறுதி தருவாயிலிருந்த அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள விரும்பினர்.மருத்துவமனை நிர்வாகமும் இருவருக்கும் கொரோனோ தொற்றுள்ள படியால் மருத்துவமனை ஓய்வறையில் சந்தித்துக் கொள்ள அனுமதித்தது.

அவர்களிருவரும் சந்தித்துக் கொண்ட ஒரு மணி நேரத்தில் இருவரின் உயிரும் பிரிந்திருக்கிறது.

மருத்துவர்களான கணவன் மனைவி இருவரையும் கொரோனோ இவ்வாறு உயிர் பறித்திருக்கிறது.

நம்மை வீட்டிலிருங்கள் என்று சொல்வதும், ஏனையோருடன் தொடர்புகளை தவிருங்கள் என்று சொல்வதும், விளையாட்டாய் தெரியலாம் தன் அன்புக்குரிய ஒருவர் பாதிக்கப்படும் வரை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading