World

இந்தியாவில் சாராயம் வாங்க தனிவரிசையில் நின்ற பெண்கள்

கர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதையடுத்து பெங்களுருவில்
பெண்களுக்கென சாராயம் வாங்க தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 4) முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதையடுத்து மதுப்பிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர்.
பெங்களுருவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குவிந்ததால் அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதுடன் கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading